உனது கவிதைகளில் மானே!
உலகியல் பிரச்சனைகள் தானே!
உல்லாசக் காதலையும் ஏனோ
உணர்ந்து எழுதிடுவாய் தேனே!
என் உயிரோடு கலந்த
மென் காதல் மலரெடுத்துக்
கவிதைத் தோரணங்கள் கட்டு!
கவிதை மாலைகள் கட்டு!
நினைவில் வாடாத காதல்
நிதமும் இளமைக் காதல்
நிலவாக ஒளிரும் காதல்
குலவக் கவிதை பாடு!
உன் காகிதமாக நானும்
உன் எழுதுகோலாக நானும்
உன்கரங்களில் ஆடினாலென்ன!
உன் கவிதையாகினால் என்ன!
No comments:
Post a Comment