Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, July 28, 2010

அனுபவத் துளிகள் - காதல் கவிதை

காதலால் சிலருக்கு
கவிதை பிறக்கும்.
கவிதையால் சிலருக்கு
காதல் பிறக்கும்.

கவிதைக்கு நல்ல
கரு வேண்டும்.
காதலுக்கு நல்ல
தெரிவு வேண்டும்.

மோதலின் பின் காதல்
தொடக்க நிலை.
காதலின் பின் மோதல்
முடிவு நிலை.

வாழ்வைக் காதலி.
ஒருத்தி உன்னையும்
காதலிப்பாள்.
உணர்வுகளுக்கு மதிப்பளி..
உண்மைக் காதல் உதிக்கும்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்
இரண்டும் சேர்ந்தால்
உண்மையில் ஊடல்.

வாழ்தல் என்பது
வரப்பிரசாதம்.
காதல் என்பது
உயிர்ப் பிரவாகம்.

தேடிப் பெறும் காதல்
ஓடி ஒழிக்கும்
நாடி வரும் காதல்
கூடிக் களிக்கும்.

காதல் கரும்பும் அல்ல
காதல் இரும்பும் அல்ல
காதல் மெல்லிய வருடல்.

காதலில் பல ரகம்.
முதலில் உன் ரகத்தை
முடிவு செய்...........

காதலில் காத்திருப்பது
புதிய சுகம்.
காக்க வைப்பது
கடின வலி.

காதலுக்கு எல்லைகள்
கிடையாது. ஆனால்
நீ எல்லைக்குள்
நின்று விடு.
அனுபவம் வளரும்.


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts