Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, July 5, 2010

நீயின்றி நானில்லை... - காதல் கவிதை

ஒரு உயிர் பூத்த 
நெருப்பாகத் தான் 
என்னுள் நுழைந்தாயடி..
 
என் உயிரின் 
ஆழம் வரை 
நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..
 
உன் ஒரு சொல் 
வார்த்தைக்காய் 
துடிக்க வைத்தாயடி..
 
உன் கடைக்கண் 
பார்வைக்காய்
நாலும் தவித்தேனடி..
 
நீ சுற்றித் திரிந்த 
தெருவெல்லாம் 
நானும் அலைந்தேனடி..
 
நீ தொட்ட 
பொருளெல்லாம் 
சேர்த்து வைத்தேனடி..
 
நீ கோரும் 
விருப்பத்திற்கே 
வாழ்வை சமைத்தேனடி..
 
நீ இல்லாத 
நொடியையும் கூட 
சபித்தேனடி..
 
உனக்குப் பிடிக்காத 
என்னையும் 
வெறுத்தேனடி..
 
காதல் காதல் என்றே 
உன்னில் -
கரைந்தேனடி..
 
சாதல் சாதலொன்றும் 
பெரிதில்லை - 
நீயின்றி நிச்சையம்; இறப்பேனடி..
 
நீ மட்டும் 
உண்டென்றால் -
உண்டென்றால்ல்ல்ல்....? 
 
வேறென்ன -
இனிக்க இனிக்க நகரும் 
தருணங்களில் - இரண்டு கைவிரித்து வானில் 
பறப்பமோடி;
உலகத்தை நம் சிரிப்பொலியில் 
நித்தமும்.. நித்தமும்.. நிறைப்போமடி!!!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts