Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, July 2, 2010

காதல் - காதல் கவிதை

ஆடை 
உரிந்தவள் நீ!
கலைந்து 
போனது நான்!
வெட்கத்தில் காதல் !

*****

என் 
காதல் புத்தகத்தின் 
முதல் பக்கமும் நீ! 
இறுதிப் பக்கமும் நீ! 
இடைப்பட்ட பக்கங்கள் 
தணிக்கை 
செய்யப்பட்டவை!

*****

என் 
வலதுபுறம் 
நடந்து கொண்டு நீ!
உன் 
ஒவ்வொரு அடியிலும் 
இடதுபுறம் 
உடைந்து கொண்டு நான்!

*****

நான் 
பொய் சொல்லும் போதெல்லாம் 
வெட்கப்படுகிறாயே!
உண்மையில் 
நீ காதலிதான்!
*****

தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!

*****

நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts