Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, July 4, 2010

உயிராக நீ...! - என்னவள்

உன் சிரிப்பில்  சிக்குண்டவள் தான் 
இன்று வெளிவரும் வழி இன்றித் தவிக்கிறேன்,
 உன் காந்தக் கண்களின் ஈர்ப்பு 
தொலைவான போதும் என்னை விடுவிப்பதாயில்லை!
உன் நினைவுகளுடன் போராடியே 
என் நித்திரை கூட தோற்றுப் போனது...
என்னால் மட்டும்  முடிந்து விட்டால் 
உன்னை எனக்கு மட்டுமே சொந்தமாக்கிட தான் ஆசை...!
 
 உன் வருகைக்காய் எதிர்பார்த்திருக்கும் கணங்கள்....
ஒரு  பதில் வர சிறு விநாடி தாமதித்தால் கூட 
ஆயிரம் முறை துடிக்க மறுக்கும் இதயம்..
சிரிக்காமல் நீ கூறும் ஜோக் ற்கு 
ஏன் சிரிக்கிறீங்க எண்ட கேள்வி வேறு?
 
அன்புடன் அடைமொழி தாங்கி வரும் உன் messageற்கு 
நான் கேலி பண்ணியது மட்டும் தான் தெரியும்,
ஆனால் அதை எதனை முறை படித்து ரசித்திருப்பேன் எண்டு 
உனக்கு  தெரிந்திருக்க நியாயம் இல்லை..!
 
விமான நிலையத்திற்கே மலர்ச் செண்டுடன் வந்து 
WELCOME MY FRIEND எண்டு வரவேற்பதாகக் கூறினாயே....
இன்று நேரில் கண்டாலும் 
முகம் திருப்பாமல் போனால் சந்தோஷமே!
 
நீங்கள் பிறந்து தொலைத்த நாள் வருதாமே
அந்த நாள் வாழ்த்துக்கள் 
நள்ளிரவு 12 மணிக்கு நீ கூறிய வாழ்த்து ..
அந்த வருடமே இனிமையாக கழிந்தது...
 
உன் too muchற்கு limit எனக்கு தெரியாது 
ஆனால் இன்று nothing at all டா..
அது உனக்கு தெரியலையோ ?
கேள்விக்கு கேள்வியில  பதிலா?
இன்று உன் பதிலிற்கு  ஆயிரம் கேள்விகள்..!
 
எவர்களைப் பற்றி எல்லாமோ கதைத்திருக்கிறோம் 
எம்மைப் பற்றித் தவிர..!
வீண் பொழுது போக்குவதாய் 
அன்று தொடங்கிய விவாதம் தான் 
இன்று விலக வைத்தது..!
 
எதற்காக உன்னைப் பிடிக்கும் எண்டு 
கேட்டாயே உன்னால் தான் 
இன்று உயிர்த் துடிப்பையே உணர்கின்றேன் என்பது...?!
 
தேர்வுகள் பிழையாக இருந்த போது 
முடிவுகள் மட்டும் சரியாக இருக்குமா என்ன?
மீண்டும் ஒரு முறை 
தீண்டிப் பார்க்காமலே நெருப்பு சுட்டது!!
 
ஆயினும் ஒரு முறை வாழ்க்கை, 
அதில் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள் 
உனக்கு பிடித்தமான அந்த வசனம்..
அதை உண்மையாக்கிட 
என்றென்றும் எனக்காக நீ வேண்டும் எண்டு 
யாசித்திடத் தான் ஆசை..
ஆனால் விலகிய உன்னை வில்லங்கமாய் 
பிடித்து இழுக்கும் உரிமை எனக்கு இல்லையே...........!!
 
வீட்டில நீ பெரிசு ,
உன் அப்பா telecomல கிடங்கு தோண்ட 
அதற்குள் இறங்கி நிற்பது உன் வேலை..
உன் அழகான முதல் அறிமுகமும் 
உன் பதினெட்டு மணி நேர தொடர் நித்திரை recordsம்
நீ அடித்த சிலந்திகளும்!
உன் குறும்புத் தனத்திற்கு அளவே இல்லையா 
என் குட்டிக் கிருஷ்ணா??
 
நான் வீணாக்கும்  ஒவ்வொரு நொடிகளிலும் 
கோவமாக உன் பார்வை உறுக்கிச் செல்கிறது..
உன் அக்கறை என்னுடன் இருக்கும் வரை 
நான் என்றும் தோற்க மாட்டேன் என்பது நிச்சயமே!
நீ எனக்க வந்தால் உன் உயிராக 
நான் இருப்பேன்..
அந்த வரத்தை நீ  எனக்கு தருவாயா??
 
நான் கூற மறுத்த காரணங்களா?
இல்லை எல்லாமே வெறும் வேஷமா?
பிரித்தறியும் சக்தி எனக்கில்லை..!
உனக்குள்ளே விவாதம் நடப்பதும் 
குழம்பித் தெளிவதுமாகவா ?
அல்லது அன்று நீ கூறியது போல் 
சாரி சொல்லி விட்டு போய்க்கிட்டே  இருக்கிறாயா?
  
எத்தனை கேள்விகள்..?
உன்னிடம் பதில் இல்லை எண்டு தெரிந்தும் 
பதில் அறிய ஆவலுடன் 
உன்னை சந்திக்கும் 
அந்த நொடிக்காக காத்திருக்கிறேன்!!!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts