Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, July 15, 2010

ஊடல் - காதல் கவிதை


காதலுக்கு அழகு...
எனக்கும் இயற்கைக்குமான காதல்...!
செந்நீர் ஓடையும்...
நறுமண மலர்களும்...
மலர் தொடர் வண்டுகளும்...
தோரண மழைத் துளிகளும்...
பனிக் கண்ணீர் சிந்தும்
துளிர்க் கண்களும்...
நிலா முகமும்...
குங்குமச் சூரியனும்...
நீலவான் சேலையும்...
விண்மீன் நகைகளும்...
நீ மட்டும் அழகாக...!!!???
ஓரவஞ்சனை ஏன்???

சமத்துவமறியா இறைவா!

சமுத்திரத்தையும்
நிலத்தையும் நீ படைத்ததேன்?
பிரிவினை உருவாக்கவா?

பேதைமைகளுக்கு நடுவே
புதைந்து கிடக்கும்...
இப்பூமியில் நீ தேடும்
புதையல்தான் என்ன....?

உயிர்ப் பந்தை உருட்டியது போதும்...

தாய் தன் குழவியை
வருத்துவதில்லை....
நீ உன் குழந்தைகளை....?
நல்லவர் சாதி...
கெட்டவர் சாதி...
ஆயின்...
யார் நல்லவர்...?
யார் கெட்டவர்...?
விடைகளை எல்லாம்
சேர்த்து வைத்துக் காத்திரு…


இயற்கை எய்தி
உனைச் சந்திப்பேன்...
ஒரு உலகம்...
ஒரே உலகமாய்..
ஒன்றைத் தயாரிப்போம்...



Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts