காதல் என்ன என்று
தெரியாது இருந்தேன்
காதலிப்பவர்கள் வேலை
ஏதும் இல்லாதவர்கள் என்று
எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு
ஒருபொழுது போக்கு
என்றும் இருந்தேன்

காதல் உணர்வுகள் அற்றது
என்று நினைத்திருந்தேன்
காதலிப்பவர்கள் முட்டால்கள்
என்று எண்ணி இருந்தேன்

காதலிப்பவர்கள் பொய்யர்கள்
என்று கருதி இருந்தேன்
காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல
என்று நகைத்தும் இருந்தேன்

என்று முதல் முதலாய்
உன்னை பார்தேனோ
அன்று தான் உணர்ந்து கொண்டேன்
காதலின் மெய்யான கருவை!

ஓருயிர் மறு உயிரை
தன் உயிரோடு சேர்த்துக் கொள்ளுவது தான் காதல்
என்று புரிந்து கொண்டேன்

காதல் இல்லாது இந்த
பூமியில் எதுவும் இல்லை!
காற்று கூட வீசாது
மெளனமாகி விடும்!

உன் சிரிப்பில்
கண்டேன் காதலை
உன் கண்களில்
கண்டேன் காதலை

உன் பேச்சில் கேட்டேன்
காதலை
உன் அருகாமையில்
சுவைத்தேன் காதலை

உன் காதல் இல்லாது
எனக்கு வாழ்க்கை
இல்லவே இல்லை
என்று உணர்ந்ததால் உன்னை
இன்றும் என்றும்
நான் காதலிக்கிறேன்