Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, June 3, 2010

நிஜமான அன்போடு...


என்
காதல் கணவனே....!
நான் உன்
நிஜமான அன்பு
அன்பான நிஜம்!
ஆனாலும்
என்
ரத்தத்தில்
முத்தத்தில்
சந்தேகம் உனக்கு!
என்
நடையில்
உடையில் சந்தேகம்!
என்
கண்ணீரில்
சிரிப்பில் சந்தேகம்!
என் மௌனத்தில்
துக்கத்தில்
தூக்கத்தில்
சந்தேகம் உனக்கு!
நான்
ஊட்டுகின்ற உணவில்
காட்டுகின்ற அன்பில்
சந்தேகம்!
காவலனாய்......
கண்காணிப்பாளனாய்....
என் பக்கத்தில் படுக்கும்
புருசன் நீ!
கடவுளுக்கும்
எனக்கும்
நல்ல உறவு வேண்டி
கோவில் சென்றால்
பூசாரிக்கும்
உனக்கும்
கள்ள உறவா
என்கிறாய்....?
உனக்கு
எவை மீதும்
சந்தேகம் வருவதால்
என்மீதும் வந்ததா?
என் மீது வந்ததால்
எவை மீதும் வருகிறதா.....?
நீ
உளவும் பார்ப்பதால்தான்
என்னோடு சேர்ந்து
வீட்டில்
சிறை இருக்கும்
காற்றையே சுவாசிக்கிறது
என் சுவாசம்!
நீ
சந்தேகப்படுவது
சரியா
தவறா
என் பதிலே
சந்தேகம் உனக்கு
ஆனாலும்
எனக்கு
உன்மீது
ஒரே சந்தேகம்!
நீ மிருகமா?
நரகமா?
ஆனாலும்
என் காதல் கணவா
நான் உன்
நிஜமான அன்பு
அன்பான நிஜம்!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts