Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, June 24, 2010

காதல் சொர்க்கம்தான் - காதல் கவிதை

ல்லூரி முடித்து 
பிரிய மனமில்லாமல் பிரியும் 
மாணவனைப் போல் 
என் படுக்கையிலிருந்து பிரிந்தவளிடம்
ஒரு முத்தம் கேட்டேன் 
சிணுங்கி எழுந்தாள்

ஒரு சிணுங்கல் கேட்டேன் 
வெட்கி சிவந்தாள்

ஒரு வெட்கம் கேட்டேன்
தலையில் செல்லமாய் இடித்தாள்

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம் தான்....
***
நீ வண்ணப்பொடிகளைக் கொண்டு
மும்முரமாய் கோலம் போடுகையில்


"ஒரு வண்ணமயில் கோலம் போடுதே!"
என்றபடி விரலால் உன் கன்னத்தில்
மஞ்சள் கோடு போட்டேன் 

நீ உதட்டைப் பிதுக்கி
"சீ..." எனும்போது 
உன் வெட்கமும் கோபமும்
சேர்ந்து பொங்கி 
சிவந்து போனது மஞ்சள் கோடு...

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்....
***
டற்கரை இரவொன்றில்
நீ வரும்வரை நிலாவை
ரசித்திருந்தேன்

அதை அறிந்த நீ 
என்னை முறைத்து
"அவளோடு என்ன பேச்சு?" 
என்றாய் கோபமாய்..

"அந்த வெண்ணிலா 
கருநிலவாய் உருமாறி 
உன் கண்களில் ஒன்றாய் 
ஆக அனுமதி கேட்கிறது" என்றேன்

நொடியில் சிவந்தாய்
பிறகு சத்தமாய் சிரித்தாய்..

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன் 
காதல் சொர்க்கம்தான்..
***


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts