இரவைத் தேடாத நிலா
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்...
நிசப்தங்களின் மத்தியில்
சப்தமாக மனதில்
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை
ஒலிக்காது போனால்...
உன் நினைவு ஏற்படுத்திய
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்...
ஒரு வேளை பெண்ணே
உன்னை நான் மறந்து போகக்கூடும்...
உன்னைவிடப் பேரழகியை
தினமும் பார்க்கிறேன்..
உன்னைவிட இனியவளை
என்றும் சந்திக்கிறேன்..
உன்னைவிடக் குணத்தவர்கள்
பலரைப் பார்த்திருக்கிறேன்...
உன்னைவிட எல்லாம்...
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே...!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! ” என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கே...

No comments:
Post a Comment