Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, June 28, 2010

காற்று - காதல் கவிதை

என் அழுகையின் போது 
மடியில் வந்து
தவழ்ந்தது.
கை உயர்த்தி கண்ணீர்
துடைத்தது.
தன் தோளில் என் முகம்
வைத்து 
உதறித் திரும்பின பக்கம் எல்லாம்
எனக்கான ஆறுதல் வைத்திருந்தது.
'என்னை விட்டுப் போயேன்' என்று
குமுறிய என் கையாலாகாத்தனம் பற்றி
எந்த விமர்சனமும் இன்றி
மென்மையாய் சொன்னது:
'மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது
போகிறேன்'
என் நட்புகளில்
காற்றை விடச் சிறந்தது
எதுவுமில்லை!
******
நதியின் அடியில்
மூச்சடக்கிக் கிடந்தேன்.
1 2 3 4...
எண்ணிக்கையில் மனம்
லயித்து..
என்னைக் காணாத
அவஸ்தை காற்றுக்கு..
அதன் தவிப்பின் துடிப்பு
எனக்குப் புரிந்தும்
வெளியே வராமல்
57..58..59..60..
மார்பு புடைத்து
முகம் சிவந்து..
'வந்துரு..'
காற்றின் அலறல் 
நீர்த்திவலைகளாய்..
மேலே மோதி
எத்தனை பிரியம் காற்றுக்கு 
என்மீது!
******


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts