Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, June 18, 2010

காதலர் தினம் - காதல்

வானவில் தோன்றும் இரவு.
காகிதப்பூக்களில் கூட நறுமணம்.
விழிகளில் வழியும் நிலவு.
கால்களின் அடியில் பூகம்பம்.
விழித்திருந்து கனவு.
ஆளரவமற்ற சாலையில் அழைப்புக் குரல்.
ஸ்விட்ச் ஆப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.
கை நழுவிப் போகும் பொழுது.
எதையும் நினைக்காமலே
கனக்கும் மனசு.
ஜாடையில் தெரிந்தாலே
அதிரும் இதயம்.
உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.
கலவர பூமியில் தென்றல்.
முழங்காலுக்கு அடியில் பஞ்சுப் பொதி.
இமைகளின் வேலை நிறுத்தம்.
பிடித்தது கூடப் பிடிக்காமல்..
பிடிக்காதது எல்லாம் பிடித்து..
தன்னைத் தொலைத்து
தன்னில் தொலைந்து..
'தான்' 'தனது' எல்லாம் மறந்து..
எந்த அரசியலாலும் சாதிக்க முடியாத
சமத்துவம்!


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts