Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, July 29, 2010

காதல் கவிதை

பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை
கணப்பொழுதில் இழக்கும் காதல்


பைத்தியமாய் ஆக்கும் காதல்
பக்குவத்தை இழக்கும் காதல்
வைத்தியமே செய்ய இயலா
வருத்தம்தான் இந்தக் காதல்


தன்னையே மறக்கும்காதல்
தவறுக்குத் தூண்டும் காதல்
உன்னையே அழிக்கும் காதல்
உயிரையே உருக்கும் காதல்


பொய் சொல்ல வைக்கும் காதல்
போதையை ஊட்டும் காதல்
வெயிலையே நிலவாய் மாற்றி
வேடிக்கை காட்டும் காதல


உறக்கத்தைப் பறிக்கும் காதல்
உள்ளத்தைக் கசக்கும் காதல்
உலகத்தைத் தனக்குள் வைத்து
ஊஞ்சலாய் ஆட்டும் காதல்


கலகத்தை உண்டு பண்ணும்
கண்ணீரில் குளிக்க வைக்கும்
கற்பனைக் கவிஞனாக்கும்
காலனைத் துணைக்கழைக்கும்


வாழ்வையே முடித்து வைக்கும்
வைரத்தை மனதிற் கொடுக்கும்
ஏழையாய் இருந்தபோதும்
எண்ணத்தில் அரசனாக்கும்.

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts