Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, July 16, 2010

மல்லிகை - காதல் கவிதை,

வெள்ளைமலர் அரும்பாக மலர்வதற்குக் காத்திருக்கும்
வேளையிலும் ஆசை வளரும்!
மெல்லிதழ்கள் வழியாக வருகின்ற வாசத்தில்
மன்மதனும் மேவி வருவான்!

அன்னைசுகம் பிள்ளைக்கு ஆனாலும் கணவன்முன்
அவள்தானே காதல் தலைவி!
சன்னதியில் தூய்மையினைத் தருகின்ற மல்லிகையும்
சரசத்தில் காமஎழிலி !
காதலியின் கருங்குழலில் கொத்தாக சேர்ந்திருந்து
கற்பனையைக் கூட்டி வளர்க்கும்!
மீதியவள் விழிசொல்ல மற்றிந்த மல்லிகையின்
மென்மைமிகு வாசம் உரைக்கும் !

காதலியின் நெஞ்சத்தை காளையவன் மஞ்சத்தில்
காண்கின்ற போது சிரிக்கும்!
பாதிமலர் கட்டிலிலே மீதிமலர் மேனியிலே
கவிதையென இரவு மணக்கும்!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts