Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Saturday, July 17, 2010

கனவுகளே இன்று கவிதையாய் - காதல் கவிதை

ஒரு நாள் 
எங்கேயோ அழைத்துச் செல்கிறாய்
நீண்ட தூரம் 
நடக்க முடியவில்லை என்றேன்
என் கையைப் பிடித்துக்கொள் என்றாய் 
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு...
அழகான கவிதையாய்!

மற்றொரு நாள் 
ரம்யமான மாலை வேளை
மொட்டை மாடியில் 
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல் 
என் கூந்தலினைக் கலைக்க,
முகத்தில் விழுந்த முடியை 
அழகாக விலக்கினாய் 
உன் விரல்களால்...
ரசனையான கவிதையாய்!

அன்றொரு நாள்
எதையோ எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களைப் 
பிடித்தன மிக அழுத்தமாக 
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒரு பார்வை 
பார்த்தாய் - அழகான 
அந்த இரவு வெளிச்சத்தில்...
அர்த்தமுள்ள கவிதையாய்!

இன்னொரு நாள்
இதழ்களின் வழியே 
உள் நுழைந்து 
உயிர் தேடிச் செல்லும் 
உ(எ)ன் முத்தம்.... 
உயிருள்ள கவிதையாய்!

கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ... ஆனால்
பொய்யான நிஜம் 
என் கனவுகளே
இன்று கவிதையாய்!


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts