Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Saturday, July 31, 2010

நிழல்களும் காதலிக்கும் - காதல் கவிதை

பல நாட்களாய்
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
உன் நிழலும்
என் நிழலும்
நம் பின்னே
நடந்து வந்தன.

அதில்
உன் நிழல் பிரிந்து வந்து
எனக்கு பின்னும்
என் நிழல் பிரிந்து வந்து
உனக்கு பின்னும்
எமை தொடர்ந்தன.

சில நாட்களாய்
எம் நிழல்கள்
எமைக்கேட்டன
“உங்களை பிரிந்து
நாமும் காதலிக்கலாமா” என்று….

அதற்கு
நாமும் சம்மதித்தோம்.
ஓர் நாள்;
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
எம் நிழல்களை காணவில்லை
காரணம்-எம்
காதலைக்கண்ட நிழல்கள்
தாமும் காதல் செய்ய
எமைப்பிரிந்தன.

இன்று
உனக்கும் நிழலில்லை
எனக்கும் நிழலில்லை
நாம் நிழல்களற்ற
மனிதராகி விட்டோம்.
ஏய் பெண்ணே !
நிழல்களும் காதலிக்கும் என்று
உன்னை காதலித்த பின்பு தான்
கற்றுக்கொண்டேனடி.

உண்மைக்காதலரின் நிழல்கள்
எப்போதும் பேசும், காதலிக்கும்.
ஆதலால்
மானிடனே !
நீயும் காதலித்துப்பார்
உன் நிழலும் பேசும் காதலிக்கும்



Friday, July 30, 2010

காதலின்றி வேறில்லை - காதல் கவிதை

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி 
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

ஓடிவந்து என் 
கழுத்தைக் கட்டிக்கொண்டு 
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது 
எனக்கான காதல்புன்னகை!

Bookmark and Share

Thursday, July 29, 2010

காதல் கவிதை

பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை
கணப்பொழுதில் இழக்கும் காதல்


பைத்தியமாய் ஆக்கும் காதல்
பக்குவத்தை இழக்கும் காதல்
வைத்தியமே செய்ய இயலா
வருத்தம்தான் இந்தக் காதல்


தன்னையே மறக்கும்காதல்
தவறுக்குத் தூண்டும் காதல்
உன்னையே அழிக்கும் காதல்
உயிரையே உருக்கும் காதல்


பொய் சொல்ல வைக்கும் காதல்
போதையை ஊட்டும் காதல்
வெயிலையே நிலவாய் மாற்றி
வேடிக்கை காட்டும் காதல


உறக்கத்தைப் பறிக்கும் காதல்
உள்ளத்தைக் கசக்கும் காதல்
உலகத்தைத் தனக்குள் வைத்து
ஊஞ்சலாய் ஆட்டும் காதல்


கலகத்தை உண்டு பண்ணும்
கண்ணீரில் குளிக்க வைக்கும்
கற்பனைக் கவிஞனாக்கும்
காலனைத் துணைக்கழைக்கும்


வாழ்வையே முடித்து வைக்கும்
வைரத்தை மனதிற் கொடுக்கும்
ஏழையாய் இருந்தபோதும்
எண்ணத்தில் அரசனாக்கும்.

Bookmark and Share

Wednesday, July 28, 2010

அனுபவத் துளிகள் - காதல் கவிதை

காதலால் சிலருக்கு
கவிதை பிறக்கும்.
கவிதையால் சிலருக்கு
காதல் பிறக்கும்.

கவிதைக்கு நல்ல
கரு வேண்டும்.
காதலுக்கு நல்ல
தெரிவு வேண்டும்.

மோதலின் பின் காதல்
தொடக்க நிலை.
காதலின் பின் மோதல்
முடிவு நிலை.

வாழ்வைக் காதலி.
ஒருத்தி உன்னையும்
காதலிப்பாள்.
உணர்வுகளுக்கு மதிப்பளி..
உண்மைக் காதல் உதிக்கும்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்
இரண்டும் சேர்ந்தால்
உண்மையில் ஊடல்.

வாழ்தல் என்பது
வரப்பிரசாதம்.
காதல் என்பது
உயிர்ப் பிரவாகம்.

தேடிப் பெறும் காதல்
ஓடி ஒழிக்கும்
நாடி வரும் காதல்
கூடிக் களிக்கும்.

காதல் கரும்பும் அல்ல
காதல் இரும்பும் அல்ல
காதல் மெல்லிய வருடல்.

காதலில் பல ரகம்.
முதலில் உன் ரகத்தை
முடிவு செய்...........

காதலில் காத்திருப்பது
புதிய சுகம்.
காக்க வைப்பது
கடின வலி.

காதலுக்கு எல்லைகள்
கிடையாது. ஆனால்
நீ எல்லைக்குள்
நின்று விடு.
அனுபவம் வளரும்.


Bookmark and Share

Tuesday, July 27, 2010

காதல் வலி தந்தவனே - காதல் கவிதை

மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..


காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே...
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே
உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே..


என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..
ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..


காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே..
கண்ணீரையும் கனவுகளையும் காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா
காதல் வலி தந்தவனே..


காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்தாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ..



Bookmark and Share

Monday, July 26, 2010

என் வாழ்வே உன்னிடமே - காதல் கவிதை


உன் நிழலில்
என் பாதையென்று
ஊருக்கும் தெரியுமடி.
உன் உயிரில்
என் இதயமென்று
உனக்கும் தெரியுமடி.

நாளும் உன் நினைவுகள்
கொண்டே - என்
உயிரை வளர்க்கின்றேனடி.
வாழ்வும் உனக்கென்று
சொல்லி - என்
காலம் செல்கிறதடி.

நிலவே!
உன் புன்னகையை
கண்ட பின்பு தான்
இறைவன் பூக்களை
படைத்தானா?

மலரே!
நானும்
உன் வதனம்
உன் மௌனம்
கண்ட பின்பு தான்
கவிஞனானேனா?

உயிரே!
உன்னை கண்டதிலிருந்து
உன்னை எண்ணி
கவிதை எழுதாத
இரவுகளை-நான்
இதுவரை
கண்டதில்லை-நான்
இறக்கும் வரைக்கும்
கவிதை எழுதிக்கொண்டே
இருப்பேனென்று
என் இதயம் சொல்லுதடி
உன் நினைவுகளோடு....


Bookmark and Share

Sunday, July 25, 2010

எனக்குள் அவள் - காதல் கவிதை

எனக்குள் அவள் நட்சத்திரம்
விடிந்தாலும் விழமாட்டேன் என்பாள்
ஒளிவீசிக்கொண்டு...!

எனக்குள் அவள் மேகம்
கலையும் முன் தருவேன் என்பாள்
கண்களிலே ஈரமதை...!

எனக்குள் அவள் வானம்
தெரிந்தாலும் தொலைவிலே என்பாள்
என் இதயத்திலிருந்து...!

எனக்குள் அவள் நாதம்
உறக்கதிலும் ஒலிப்பேன் என்பாள்
மாறாத நினைவுகளை...!

எனக்குள் அவள் குழந்தை
பிடிவாதம் கொள்வேன் என்பாள் 
"பிரியத்தான்" வேண்டுமென்று...!


Bookmark and Share

Saturday, July 24, 2010

பூப்பூக்கும் காதல் - காதல் கவிதை

நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்

பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்

பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்

உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்

இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்


Bookmark and Share

என்னவளே - காதல் கவிதை

காலைச் சுடருமல்ல மாலைவரு மதியுமல்ல
பாகாய்க் கொடுக்கின்ற பாங்கான சுவையுமல்ல
சாலை மரமுமல்ல சந்தனக் குளிருமல்ல
வாலைக் குமரியல்ல வாசமுள்ள பூவுமல்ல
ஆனாலும் ஆனாலும் அத்தனையும் நீயானாய்

எல்லாம் இருந்தாலும் அன்போடு சொல்லிக் கொள்ள
ஒன்றிரண்டு குறைகளுண்டு என்னவென்று கண்டு கொள்வாய்
வழக்கத்தில் வழுவிருந்தால் விலக்குவதில் தவறல்ல
பழக்கத்தில் கொள்வதெல்லாம் பக்குவமாய்க் கூடிவரும்

இலக்கங்கள் பார்த்து வெறும் கலக்கங்கள் கொள்ளாதே
மூடப் பழக்கத்தின் வழக் கொழிப்பாய் விளக் கொளியாய்
கோபத்தைக் குறை அது கூட உன் குறையடி
மாமன் மகள் அல்ல மாமகளாய்த் திகழ்ந்திடுவாய்


Bookmark and Share

Thursday, July 22, 2010

இது தான் காதல் என்பதா…? - காதல் கவிதை

நிழலாய் நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல் என்பதா…!

உன்னோடிருக்கும் தருனங்கள்
சுகங்களானது……….!
உன்னை நீங்கியிருக்கும் தருனங்கள்
சுமைகளானது……….!
இது தான் காதல் என்பதா…!

யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!

சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே…………!


Bookmark and Share

Wednesday, July 21, 2010

உயிர் - காதல் கவிதை

உள்ளுக்குள் 
நீ 

இருப்பதால்
 .......... 
தான்
 
உயிரோடு
 
நான்
 
இருக்கிறேன்


Bookmark and Share

Tuesday, July 20, 2010

காதல் - காதல் கவிதை

எனக்குள் இருக்கும் 
உன்னையே
 உன்னால் 
புரிந்து
 கொள்ள 
முடியாத
 போது! 

உனக்குள்
 இருக்கும் 
என்னை
 எப்படியடி 
புரிந்து
 கொள்வாய்..........

Bookmark and Share

Monday, July 19, 2010

உன் மடி மீது தலை சாய - காதல் கவிதை

உன் மடி மீது தலை சாய
ஆசைப்பட்ட எனக்கு…
உன் நெஞ்சணையில்
எனைச் சாய்த்து
வள்ளல் எனக் காட்டி விட்டாய்..!
என் மீசைதனை பிடித்திழுத்து
உன் குறும்புகளை
அவிழ்த்து விட்டாய்..!
இதை அத்தனையும்
ஆனந்தமாய் என்
அடி மனதில் சேமிக்கிறேன்..!
நீ என்னருகே இல்லாத
தருணங்களில் 
மீட்டெடுத்துப் பார்ப்பதற்கு..! 

Bookmark and Share

Sunday, July 18, 2010

நீ கொடுத்த காதல் - காதல் கவிதை

வானத்து மேகமாய்
வண்ணங்களை காட்டி
களைந்து சென்றது காதல்
சுட்டெரிக்கும் வாழ்க்கையில்
மேகம் தரும் நிழலாய் நீ
நிழல் கரைந்தது நிஜம் சுடுகிறது
அடிவானத்து மேகம் பார்க்குபோது
நீயும் நானும் கொஞ்சி விளையாடிய
வெட்கத்தின் சாயம் பூசிகொண்டதே எனதோணும்
மேகமும் காதலும் ஒன்றென தெரியாது
ஆனால் நீயும் காதலும் ஒன்றென தெரியும்
மேகம் மழை கொடுத்து கரையும்
நீ காதல் கொடுத்து காணமல் போகிறாய்
மேகம் கொடுத்த மழை
மண்வாசம் விட்டு செல்லும்
நீ கொடுத்த காதல் – என் உயிரை
எடுத்துசென்றதா கொடுத்து சென்றதா ?..
நிழல் கொடுக்கும் வான்மேகம்
காதல் கொடுக்கும் உன் வனப்பு
வெண்பஞ்சு பட்டுடுத்தி சுட்டெரிக்கும்
சூரியன் போல் என் இறுதிஊர்வலத்திற்கு
உடுத்திவருவாயோ கார்முகிலை கனகட்சிதமாக


Bookmark and Share

Saturday, July 17, 2010

கனவுகளே இன்று கவிதையாய் - காதல் கவிதை

ஒரு நாள் 
எங்கேயோ அழைத்துச் செல்கிறாய்
நீண்ட தூரம் 
நடக்க முடியவில்லை என்றேன்
என் கையைப் பிடித்துக்கொள் என்றாய் 
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு...
அழகான கவிதையாய்!

மற்றொரு நாள் 
ரம்யமான மாலை வேளை
மொட்டை மாடியில் 
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல் 
என் கூந்தலினைக் கலைக்க,
முகத்தில் விழுந்த முடியை 
அழகாக விலக்கினாய் 
உன் விரல்களால்...
ரசனையான கவிதையாய்!

அன்றொரு நாள்
எதையோ எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களைப் 
பிடித்தன மிக அழுத்தமாக 
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒரு பார்வை 
பார்த்தாய் - அழகான 
அந்த இரவு வெளிச்சத்தில்...
அர்த்தமுள்ள கவிதையாய்!

இன்னொரு நாள்
இதழ்களின் வழியே 
உள் நுழைந்து 
உயிர் தேடிச் செல்லும் 
உ(எ)ன் முத்தம்.... 
உயிருள்ள கவிதையாய்!

கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ... ஆனால்
பொய்யான நிஜம் 
என் கனவுகளே
இன்று கவிதையாய்!


Bookmark and Share

Popular Posts