Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Saturday, June 19, 2010

ஆறு வரி கவிதை - காதல்

இலக்கியம் பல படித்து
இரவு பல வழித்து
கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
.ம்.. என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை.


இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்...
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ
என்ற பயம் எனக்கு.


இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை.

10 comments:

Popular Posts