Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, June 30, 2010

கனவில் அவள் - காதல் கவிதை

யாரோ துரத்துகிறார்கள்
அல்லது
எழுதாத தேர்வில்
நேரம் தப்பிய அதிர்ச்சி
உச்சிக்குக் கொண்டுபோய்
உருட்டி விடும் எதிரி யாரென்று
பல கனவுகளுக்குப் பின்னும்
தெரியவில்லை.

நேரில் பேச இயலாமல் போன
சின்ன வயசு சிநேகிதி
கனவில் அநாயசமாய்
ஒரு புன்னகை
வீசிப் போகிறாள்

சில நாள் கனவில்
அவள் பேசியது
கண் விழித்தபின்
மறந்து போகிறது

கனவுகள் எதுவானாலும்
அவற்றின் வரவு
ஒவ்வொரு இரவின் தொடக்கத்திலும்
மனதின் எதிர்பார்ப்பாகிறது

கனவுகளற்ற இரவுகள்
அதனை அடுத்த பகல்களில்
நினைவின் உறுத்தல்கள்!


Bookmark and Share

Tuesday, June 29, 2010

உன்னோடு இருந்திருப்பேன்... - காதல் கவிதை

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ? 







Bookmark and Share

Monday, June 28, 2010

உன்னைவிட - காதல் வலி

இரவைத் தேடாத நிலா 
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்...
நிசப்தங்களின் மத்தியில்
சப்தமாக மனதில் 
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை  
ஒலிக்காது போனால்...
உன் நினைவு ஏற்படுத்திய
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்...
ஒரு வேளை பெண்ணே
உன்னை நான் மறந்து போகக்கூடும்...
உன்னைவிடப் பேரழகியை
தினமும் பார்க்கிறேன்..
உன்னைவிட இனியவளை
என்றும் சந்திக்கிறேன்..
உன்னைவிடக் குணத்தவர்கள்
பலரைப் பார்த்திருக்கிறேன்...
உன்னைவிட எல்லாம்...
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே...!


Bookmark and Share

காற்று - காதல் கவிதை

என் அழுகையின் போது 
மடியில் வந்து
தவழ்ந்தது.
கை உயர்த்தி கண்ணீர்
துடைத்தது.
தன் தோளில் என் முகம்
வைத்து 
உதறித் திரும்பின பக்கம் எல்லாம்
எனக்கான ஆறுதல் வைத்திருந்தது.
'என்னை விட்டுப் போயேன்' என்று
குமுறிய என் கையாலாகாத்தனம் பற்றி
எந்த விமர்சனமும் இன்றி
மென்மையாய் சொன்னது:
'மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது
போகிறேன்'
என் நட்புகளில்
காற்றை விடச் சிறந்தது
எதுவுமில்லை!
******
நதியின் அடியில்
மூச்சடக்கிக் கிடந்தேன்.
1 2 3 4...
எண்ணிக்கையில் மனம்
லயித்து..
என்னைக் காணாத
அவஸ்தை காற்றுக்கு..
அதன் தவிப்பின் துடிப்பு
எனக்குப் புரிந்தும்
வெளியே வராமல்
57..58..59..60..
மார்பு புடைத்து
முகம் சிவந்து..
'வந்துரு..'
காற்றின் அலறல் 
நீர்த்திவலைகளாய்..
மேலே மோதி
எத்தனை பிரியம் காற்றுக்கு 
என்மீது!
******


Bookmark and Share

Saturday, June 26, 2010

ரகசியம் - காதல் கவிதை

மனதுக்குள் தொலைத்த 
“வாழ்க்கையை” 
மணிக்கணக்காய் வெளியில்
தேடிக் கொண்டிருக்கிறாய்…

பணமா, புகழா
பதவியா, அதிகாரமா
இன்னும் எதுவோ?
இவை தெரியாமலேயே
தேடித் தேடி வயது
தொலையும்…

தேடலில் சோர்ந்த 
தேகம்…
இளைப்பாறும் போது…
இதயம் சொல்லும் இதமாக,

“உன் சந்ததிக்களுக்கேனும்
இன்றே சொல்லிவிடு
இந்த ரகசியத்தை…”


Bookmark and Share

Thursday, June 24, 2010

காதல் சொர்க்கம்தான் - காதல் கவிதை

ல்லூரி முடித்து 
பிரிய மனமில்லாமல் பிரியும் 
மாணவனைப் போல் 
என் படுக்கையிலிருந்து பிரிந்தவளிடம்
ஒரு முத்தம் கேட்டேன் 
சிணுங்கி எழுந்தாள்

ஒரு சிணுங்கல் கேட்டேன் 
வெட்கி சிவந்தாள்

ஒரு வெட்கம் கேட்டேன்
தலையில் செல்லமாய் இடித்தாள்

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம் தான்....
***
நீ வண்ணப்பொடிகளைக் கொண்டு
மும்முரமாய் கோலம் போடுகையில்


"ஒரு வண்ணமயில் கோலம் போடுதே!"
என்றபடி விரலால் உன் கன்னத்தில்
மஞ்சள் கோடு போட்டேன் 

நீ உதட்டைப் பிதுக்கி
"சீ..." எனும்போது 
உன் வெட்கமும் கோபமும்
சேர்ந்து பொங்கி 
சிவந்து போனது மஞ்சள் கோடு...

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்....
***
டற்கரை இரவொன்றில்
நீ வரும்வரை நிலாவை
ரசித்திருந்தேன்

அதை அறிந்த நீ 
என்னை முறைத்து
"அவளோடு என்ன பேச்சு?" 
என்றாய் கோபமாய்..

"அந்த வெண்ணிலா 
கருநிலவாய் உருமாறி 
உன் கண்களில் ஒன்றாய் 
ஆக அனுமதி கேட்கிறது" என்றேன்

நொடியில் சிவந்தாய்
பிறகு சத்தமாய் சிரித்தாய்..

அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன் 
காதல் சொர்க்கம்தான்..
***


Bookmark and Share

Popular Posts