Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, April 7, 2010

ஏன் பிரிந்தாய்…!

பத்து மாதம் சுமந்து பெற்ற
தாய் மடி போலே உன்
மடியை சுவாசித்தேன் நானடா
சுவாசித்த என் நெஞ்சம்
நடந்தது புரியாமல்
ஏங்கியது ஏனடா
காதல் வலையை வீசி
ஏனடா என்னை
சிக்கவைத்தாய் காதலா
உன் வலைக்குள் சிக்கிய
என் இதயத்தை ஏனடா
நெருப்பில் சுட்டுவிட்டாய்
நீ சுட்ட என் இதயம்
உன் பெயரை
சொல்கிறது பாரடா
ஏனெனில்
என் இதயமே நீயடா
பால் குடிக்கும் குழந்தைபோலே
பச்சைப் பசும் சோலை போலே
என் உயிரிலும் மேலானதடா
என் காதல்
பருவத்தில் வரும் காதல்
என எண்ணி உன் கர்வத்தின்
கையால் கிள்ளி எறிந்த காரணத்தை
சொல்லடா
உனக்கா பிறந்தேன் என எண்ணி
என் உள்ளம் கால் முதல் உச்சிவரை
உன் உருவததை வரைந்த பாவி அல்லவா
நான்
சற்று சிந்தித்துப் பாரடா
என் அன்பின் ஆழம்
புரியவில்லையா உனக்கு
என் காதலை நெஞ்சிலே சுமந்து
உன் உருவத்தை என் உயிரினில்
வரைந்தேனடா
ஏனடா ஏனடா
என்னைப்  பொய்யாக்கி
பாவம் செய்கிறாய் நீயடா
பரிட்சை எழுதும் நேரத்தில்
கண்ணுக்குள் ஏன் வந்தாய் காதலா
உன்னைப் பார்த்த கண்கள் கடல்போல்
கண்ணீரை பெருக வைத்தது ஏனடா
பரிட்சையே என்னால் எழுதாமல்
போனது ஏனடா
கண்ணாடி இதயமடா எனக்கு
அதை கீழே போட்டு உடைத்தது
எதற்கு
என் உயிர் உள்ளவரை
உன் முகம் மறையாது
காதலா
உயிரோடு இருந்தால்
என் கண்கள் உன்னைக்
காணாது
நீ என்னை
திரும்பிப் பார்ப்பாயடா
காதலா
நீ பார்க்கும் வேளையிலே
உனக்காகவே
ஒரு காதல் சின்னம்
காத்திருக்கும் பாரடா
அது என் கல்லறைதானடா
முடிந்தால் காதலா
உன்னால் முடிந்தால்
ஒரு பூ
உன் காதலிக்காக அல்ல
உன்னைக்
காதலித்ததிற்காக வைத்துவிடு

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts