மோதியது,
ஒரு பூகம்பம்!
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!
ஒரு முத்தமிடு.
பயப்படாமல்...
அல்லது
பையப் படாமல்
ஒரு போர்வை.
உள்ளே
ஒரு போர் வை!
ஏன்
காதலித்தேன்?
என்
காதலி தேன்!
ஏய் அழுகுணி
அழுகையிலும்
அழகு நீ!
திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.
என் மரணம்
சாதாரணம்.
காதலின் மரணம்
மாரணம்!
காதலி,
காதல் ஈ.
என்னைக் காதலி!
இதயத்தைக்
கிழித்தாள் ஒரு தையல்!
அவளேப் போடட்டும் 'தையல்'
No comments:
Post a Comment