Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, June 4, 2012

அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய் - காதல் கவிதை


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ!

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ.
சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி.

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.
முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! 


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts