Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, August 4, 2010

காமம் கடந்து...! -காதல் கவிதை

உன் நுனிவிரல் நகம் படவும்
தாவணி நூல் தொடவும்
கடந்து வருவேன் பலநூறுமைல் 

காற்றும் பாரா இடம் பார்த்து
காத்திருப்பாய் காதல் வளர்க்க

நான் எதிர்பார்த்திருந்த
அந்த எதிர்பாராத தருணத்தில்
சற்றே விலகிமூடும் உன் மாராப்பு

கணப்பொழுதின் காட்சி விழுங்கி
உள்ளே மிருகமாய் வெளியே மனிதனாய்
அமர்ந்திருக்கும் என் நாகரீகம்
உன் நற்சான்றிதழ் பெற

என் பார்வைக்கே சிவக்கும்
உன் பசலை பச்சை உடல்

காதலில் பூத்த காமம்
திருமணத்தில் கனிந்து
பின்நசுங்கியது
வாழ்க்கையின் நெரிசலுக்குள்

திருப்தியில்லாத செரிமானங்களுடன்
வாழ்கிறது மனம் வயிறைப் போலவே
எரிச்சல்களின் எச்சங்களோடு

பெருத்தநம் உடல் காட்டி
கனவுகளைத்தகர்க்கிறது கண்ணாடி

இன்றும் உடை மாற்றுகிறோம்..
ஒரேஅறைக்குள் கனத்த மௌனத்துடன்
அவரவர் உடல் பார்த்து

வெளியில் விளையாடும்
நம் குழந்தைகள் நலம்கருதி..!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts