Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, August 5, 2010

பிரார்த்தனை - காதல் கவிதை

பெண்ணைக் கட்டி அணைத்திடவும்
பூவிதழ் தன்னை சுவைத்திடவும்
ஒன்றி வீடு சுகம் பெறவும்
விழைந்தேன் என்னை இழந்தேன் நான்!


என்னைக் கட்டி அணையுங்கள்
இதழில் உம்சுவை அளியுங்கள்!
ஒன்றி வீடு சுகம்பெறவே
விழைந்தேன் என்னை இழப்பேன் நான்!

Bookmark and Share

Wednesday, August 4, 2010

காமம் கடந்து...! -காதல் கவிதை

உன் நுனிவிரல் நகம் படவும்
தாவணி நூல் தொடவும்
கடந்து வருவேன் பலநூறுமைல் 

காற்றும் பாரா இடம் பார்த்து
காத்திருப்பாய் காதல் வளர்க்க

நான் எதிர்பார்த்திருந்த
அந்த எதிர்பாராத தருணத்தில்
சற்றே விலகிமூடும் உன் மாராப்பு

கணப்பொழுதின் காட்சி விழுங்கி
உள்ளே மிருகமாய் வெளியே மனிதனாய்
அமர்ந்திருக்கும் என் நாகரீகம்
உன் நற்சான்றிதழ் பெற

என் பார்வைக்கே சிவக்கும்
உன் பசலை பச்சை உடல்

காதலில் பூத்த காமம்
திருமணத்தில் கனிந்து
பின்நசுங்கியது
வாழ்க்கையின் நெரிசலுக்குள்

திருப்தியில்லாத செரிமானங்களுடன்
வாழ்கிறது மனம் வயிறைப் போலவே
எரிச்சல்களின் எச்சங்களோடு

பெருத்தநம் உடல் காட்டி
கனவுகளைத்தகர்க்கிறது கண்ணாடி

இன்றும் உடை மாற்றுகிறோம்..
ஒரேஅறைக்குள் கனத்த மௌனத்துடன்
அவரவர் உடல் பார்த்து

வெளியில் விளையாடும்
நம் குழந்தைகள் நலம்கருதி..!

Bookmark and Share

Tuesday, August 3, 2010

உன் நினைவோடு... நானிங்கு - காதல் கவிதை

நீ அங்கு...
நான் இங்கு...

நாம் வாழும் வாழ்க்கையின்
இருப்பிடம் வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா...

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா...

கானல் நீ....ராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காத லினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே எதிர்க்கின்றேன்


Bookmark and Share

Monday, August 2, 2010

அன்பின் இருப்பிடமே… - காதல் கவிதை

என்னவளே, பிரியமானவளே, நேசத்திற்குரியவளோ 
என்னை நான் உணரவைத்த அன்புக்குரியவளே 
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி 
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ 
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே 

பிரிவென்பது நமக்கில்லை இரண்டென்பதும் நமக்கில்லை 
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே 
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே 
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே 

வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே 
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே 
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற 
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ 

அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே 
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது 
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே 
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்

Bookmark and Share

Sunday, August 1, 2010

என் இதயத்தில் நீ - காதல் கவிதை

மலர்ந்த மலரானது இறக்கும் வரை
அதன் வாசனை
மலரைவிட்டு நீங்குவதில்லை
இதயத்தில் மலர்ந்த காதல்
இதயம் இறக்கும் வரை
இதயத்தைவிட்டு நீங்குவதில்லை

உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்


என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை
என்னில் இருந்து உனை யாரலும் பிரிக்க முடியாது
ஏனெனின்
என் இதயத்தின் துடிப்போடு சேர்ந்து விட்டாய் நீ

உடலில் இதாயம் என்பது ஒன்றுதான்
என் இதயத்தில் வாழ்பவள் ஒருத்தி மட்டும் தான்
அது
நீ மட்டும் தான் என் காதலியே

நீ இதயத்தில் வாழும் வரை
என் உடலை உருக்கி
உன்னை வாழ வைப்பென்
நீ இதயத்தில் வாழும் வரைதான்
இந்த உடலும் இருக்கும்
இதயத்தில் துடிப்பும் இருக்கும்

இறுதி துடிப்பை துடித்து
தன் துடிப்பை நிறுத்திகொள்ளும் வேளையிலும்
உன்னை நேசிக்குமடி என் இதயம்


Bookmark and Share

Popular Posts