Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, August 29, 2012

சிந்தனை துளிகள்


ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! -அப்துல் கலாம்

தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை..அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை-பில்கேட்ஸ்

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு...வெற்றி வந்த பின்பு 
குதிரையை விட வேகமாய் ஓடு...அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்-விவேகானந்தர்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஐன்ஸ்டைன்

திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம். - எம்.ஜி.ஆர்

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள். - சிவ் கெரோ

உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உங்களை விரும்புவன்; நண்பன். - எல்பெர்ட்ஹெப்பர்ட்
Top of Form

நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்! - ஓஷோ ரஜனீஷ்

ஒரு மனிதனின் உண்மையான செல்வம் அவன் இந்த உலகில் செய்யும் நல்ல விடயங்களாகும்.- முஹம்மது நபி (ஸல்)

சமாதானத்தை படைபலம் கொண்டு மேற்கொள்ள முடியாது. அதை புரிந்துணர்வு மூலமே பெற்று கொள்ளலாம் - அல்பர்ட் ஜன்ஸ்டைன்

அறிந்து கொள்வது போதாது, அதை செயல்படுத்த வேண்டும். ஆசைப்படுவது போதாது, அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். - ஜொனதன் வுல்ப்கெங்க் வொன் கோதே

விடா முயற்சி, ஆர்வம், அடக்கம் ஒழுங்கு ஆகியவை மூலமாகத் தம்மை ஒரு தீவு போல் ஆக்கிக்கொண்டு வெள்ளத்தில் சிக்கிக் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் அறிஞர்கள் -புத்தர்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.


Bookmark and Share

Tuesday, August 14, 2012

சுதந்திர தினம் - சுதந்திர தினம் கவிதை

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது 
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது 
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது 
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது 
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது 
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது 
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது 
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது 
விட மனமில்லை....! 


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...


Bookmark and Share

Popular Posts