
என்னவளே...
வெள்ளி கண்களை போல விண்ணில்
ஆயிரமாயிரம் வின்மீன்கள் இருந்தாலும்...
அந்த ஒற்றை நிலவை
தேடும் மனிதர்களை போல...
என் எதிரே ஆயிரமாயிரம்
பெண்கள் கடந்து சென்றாலும்...
என் கண்கள் தேடுவது
உன் நிலா முகத்தைத்தான்...
ஒற்றை நிலா விண்ணெல்லாம்
நிறைந்திருப்பதுபோல...
என் ஒற்றை இதயத்தில்...
உன் நினைவுகள் மட்டுமே
நிறைந்திருக்கிறது...
என் நினைவில்
கலந்திருப்பவளே...
நிஜத்தில் என்னோடு
கலந்திருப்பது எப்போது...