Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, September 26, 2012

இந்த ரோஜாவை - காதல் கவிதை

இந்த ரோஜாவை வாங்குபவள்
எந்த மகராசியோ என
என் உள்மனதில்
எண்ணங்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன ,

எவளும் வாங்கமாட்டாள் என '
எகத்தாளப் பார்வையுடன்
சில காதலன்கள் கிளம்புகிறார்கள்
காதலிகளை இழுத்துக்கொண்டே

மாலை வரத்தொடங்கிய
வேளையில்தான் புரிந்தது
இந்த வருடமும் .
காதலி கிடைப்பதற்கில்லையென,


இப்பொழுது நினைக்கிறேன்
அம்மாவின் தலையில் வைத்து
அழகு பார்த்திருக்கலாம்
இந்த ரோஜாவை ...


Bookmark and Share

Friday, September 7, 2012

உன்னில் உறைந்துபோனேன் நான்! - காதல் மொழி


தட்டுப்பட்டது நானெனில் அச்சம் தவீர்; பத்திரமாய் இருக்கு உன் மனது என் உயிர்கூட்டிற்குள்!

அச்சம் என்றெல்லாம் ஒன்றுமில்லை; மிச்சமாய் என்னுள் ஏதும் இல்லை; உன்னைத்தவிர!



நிலாப்பெண்ணின் மொத்தமும் நானானேன்! எந்தன் சித்தம் முழுதும் நீயானாய்!


எப்படி என்னுள் நுழைந்தாயோ அப்படியே என்னுள் நிறைந்தாய்! 



வார்த்தைக்குள் என் அன்பு அடங்கிவிடும் எனில் வானம் மூன்றெழுத்தில் முடிந்து விடும்.


உன் அன்பு கண்டு உறைந்துபோய் நிற்கிறேன் - வார்த்தைகளின்றி!



வார்த்தையில் என்ன இருக்குஉன் பார்வையில் மொத்தம் அன்பும் வழிந்திடும் போது!


உன்னில் உறைந்துபோனேன் நான்! பிறகு வார்த்தையெங்கே? பார்வையெங்கே?




உறைந்து போன உனது விழிதனில் இளகிய பார்வையொன்றைக் கண்டேன்! மருகி கிடந்த எம்மனதும் கொஞ்சம் உருகிடக் கண்டேன்!


அதிகமாய் உருகிட வேண்டாம்! உள்ளிருக்கும் என் மனதிற்கு உறுத்திடக் கூடும்!



எம்மனதை இழந்தேனும் உன் மனதைக் காப்பேன்.


ஏற்கனவே என்னிடம் இழந்த மனதை எப்படித் திரும்பவும் இழப்பாய்?



உன்னை மீட்க வேண்டும் எனில் மீண்டும் எம்மனதை மீட்டு உன்னைக் காப்பேன்!


உம்மனது இருப்பதோ என் உயிர்க்கூட்டினுள் - என் உயிரை மாய்த்து பின் எடுத்துக்கொள் தேவையெனின்!



உனை மாய்க்கையில் மடிவது நாமல்லவோ?


மடிவது நாமாயினும் வாழட்டுமே காதல்! 


நம்மோடே மடிந்து விடாதோ காதல்? காதல் இல்லாமல் நாம் எப்படி?


பிரிதலிலும் சேர்தலிலும் இல்லை காதல் - எல்லாம் அவரவர் மனதினில்! 



பிரிவென்பதும் சேர்தல் என்பதும் இல்லை காதல் :-)


இது கள்ளாட்டம் - திரும்பவும் எல்லாத்தையும் அழி, முதலிலிருந்து.....


Bookmark and Share

Popular Posts