Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Tuesday, January 31, 2012

கொலை - காதல் கவிதை


புயலில் பிழைத்து,
இடியில் தப்பித்து,
தீயில் நடந்து,
நீரில் தவழ்ந்து
உன்னை காண வந்தேன்
ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!





Bookmark and Share

Sunday, January 29, 2012

சிக்கல் - காதல் கவிதை


காதல் புயல் என்றறிந்தும்
ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
காதல் தீ என்றறிந்தும்,
ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
காதல் சுழல் என்றறிந்தும்
ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!


Bookmark and Share

Tuesday, January 17, 2012

அவளின் பிறந்த நாள் - காதல் காவியம்

பூவுக்கு பிறந்த நாளாம்!
புத்தாடை போர்த்திக்கொண்டது…
பூவிலும் அவள்
மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
அது வாடி விடும்.
அவளோ வாடா மல்லி
என்றென்றும் “வாடா மல்லி “!

Bookmark and Share

Monday, January 9, 2012

தேடல் - காதல் கவிதை



மலரை தேடி வண்டு வந்தது,
மகிழ்கிறாய்!
இரவை தேடி நிலவு வந்தது,
ரசிக்கிறாய்!
உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
ஏனடி வெறுக்கிறாய்?



Bookmark and Share

Popular Posts